இனி WiFi தேவையில்லை வந்துவிட்டது LiFi
லை-பை தொழில்நுட்பம் முதலில் 2011 ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால் நொடிக்கு 224GB வேகத்தினைக் கொடுக்கக் கூடியது. தற்போது லை-பையின் உதவி கொண்டு கிடைக்கும் இணையத்தின் வேகமானது நாம் இன்று பயன்படுத்தும் வை-பையின் வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாக உள்ளதை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துள்ளனர்.
அவர்களது ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபிஉக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும் என்று கண்டறிந்தனர்.மேலும் ஓரே இணைப்பில் அதிக கருவிகள் இணைக்கப்படும் போது அதன் வேகம் குறையாமல் இருப்பதன் இதன் மூலம் கண்டறிந்தனர். ஒளிகள் மூலம் இணைய இணைப்பை பெறுவதால் இதற்கு லைஃபை என பெயரிட்டுள்ளனர்.
வைஃபை தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைவரிசைகள் பாவிக்கப்படுவதால் அவை மருத்துவமனைகள், விமானங்கள், மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆதலால், லைஃபை தொழில்நுட்பம் மூலமாக, இந்தக் குறையை போக்கிக் கொள்ளலாம் என, எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட்டு ஹாஸ் 2011 இல் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் லைஃபை என்ற தொழில்நுட்பத்தை முதல் முறையாக தெரிவித்திருந்தார். வீட்டில் உள்ள வைஃபை இணைப்பு சரியாக கிடைக்காமல் போவதற்கு வீடுகளில் பாவிக்கப்படும் இலத்திரனியல் சாதனங்கள் ஒரு காரணம். டிசம்பர் மாதத்தில், குறிப்பாக அனேகமானோரின் வீடுகளில் வைஃபை இணைப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்பதற்கு காரணம் வீடுகளில் உள்ள கிருஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள மின்குமிழிகள் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

No comments