இறந்தவர் உடலோடு அவர் பயன்படுத்திய பொருட்களை எரிப்பது ஏன்?


இறந்தவர்களை (Cremation) எரிப்பதோ அல்லது புதைப்பதோ உலகின் எல்லா சமயத்தினரின் மரபாகும். அதேபோல் மேலும் ஒரு விஷயம் அனைத்து மரபினராலும் ஒரேய மாதிரியாக பின்பற்றப்படுகின்றன. என்ன தெரியுமா? அதுதான் அவர்கள் உபயோகபடுத்திய மிகவும் விரும்பிய பொருட்களை கல்லறையிலோ அல்லது தகனம் செய்யுமிடத்திலோ விட்டுவிட்டு வருவது.

 இதற்க்கு பெரும் உதாரணமாக தமிழ் மரபு வழி இறுதி சடங்கினை கூட எடுத்து கொள்ளலாம். இறந்துபோன பெரியவர்கள் அவர்கள் உபயோகப்படுத்திய கைத்தடி, வெற்றிலை பெட்டி, மணிமாலைகள், திண்பண்டம், விரும்பி உடுத்தும் உடைகள், குழந்தைகள் என்றால் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் இதுபோன்ற பொருட்களை தகனம் செய்யும் இடத்திலேயே விட்டுவிட்டு வருவது வழக்கம்.

 ஆனால் இதற்க்கு சில அறிவியல் விளக்கங்களும் தருகின்றனர், ஒரு மனிதன் தான் வாழும் பொழுது அவனை சுற்றி ஆன்ம பிம்பம் தோன்றும் இது மனிதனுக்கு மட்டுமல்ல, அவனை சுற்றி இருக்கின்ற எல்லா பொருட்களுக்கும் இருக்கும். 

மனிதனில் காணப்படும் வெவ்வேறு விதமான ஆன்ம பிம்பங்கள் 

இது ஒரு உயிரினம் மற்றோரு பொருட்களின் மீது அன்பு செலுத்தும் பொழுதோ பற்று வைக்கின்ற பொழுதோ அந்த பொருளின் மீதும் இந்த ஆன்ம பிம்பங்கள் ஒட்டிக்கொள்கின்றன.
ருத்திராட்சையில் காணப்படும் ஆராவின் வடிவம் 
அதை பயன்படுத்துகின்ற உயிரினம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்பொழுதும் அந்த ஆன்ம பிம்பமானது அந்த பொருளினை ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். சிலரது ஆன்ம பிம்பத்தின் தாக்கம் நன்மையாகவும் இருக்கும் அல்லது தீமையாகவும் இருக்கும், பெரும்பாலும் மக்கள் அது எப்படி இருந்தாலும் சரி பிரச்சனை வேண்டாம் என இறந்தவர் உடலோடு விட்டு வருகின்றனர். மேலும் ஒரு பதிவில் ஆரா என்றால் என்ன அதன் நன்மை தீமைகளை அறியலாம்.

No comments

Powered by Blogger.