சிற்பத்தின் வாயில் இருக்கும் உருளை பந்து! எப்படி செய்திருப்பார்கள்?
![]()  | 
| Tamil Reveal Facts App - Google Play | 
நாம் அனைவருமே தமிழக கோவில்களில் யாளியின் உருவத்தை பார்த்திருப்போம். பார்ப்பதற்கு சிங்கம் போன்று தோன்றும்.
![]()  | 
| Tamil Reveal Facts App - Google Play | 
 இந்த யாளியின் வாயில் ஒரு உருளை கல் ஒன்றை வைத்துள்ளனர். இந்த கல்லினை உங்களால் உருட்ட இயலும் ஆனால் வெளியே எடுக்க முடியாது. பின்னர் எப்படி இந்த உருளை கல்லினை உள்ளே வைத்திருப்பார்கள்? 
இன்றுவரை இந்த கேள்விக்கு விடை கிடையாது என்பதே உண்மை. ஆனால் இதற்கு சில பதில்கள் கூறப்படுகின்றன. அதற்கு தக்க மறு கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன.
யாளியை செதுக்குகின்ற பொழுதே அதன் வாயினுள் இருக்கும் உருளைக்கு தேவைக்கான கல்லை உள்ளேயே வைத்து செதுக்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. உருளையை செதுக்க வேண்டும் என்றால் 8 புறங்களிலும் இருக்கும் இணைப்பை நீக்கவேண்டும்.
 அப்படி நீக்கினால் தான் கல்லானது யாளியின் வாயினுள் விடுபட்டுகிடக்கும். மற்ற 6 புறங்களில் நீக்கினாலும் தாடை மற்றும் மூக்கின் பகுதியை நீக்க இயலாது. ஏன் என்றால் இப்போது இருக்கின்ற நுண்ணிய தொழில்நுட்ப கருவிகள் அப்போது  ஏதும் கிடையாது, வெறும் உளி போன்ற பொருட்களை வைத்து தட்டினால் மூக்கின் நுனி மற்றும் தாடை எப்பொழுதோ பலவீனம் ஆகி  உடைந்திருக்கும்.
ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் உறுதியாக இருக்கிறது. 
பின்னர் எப்படி செய்திருப்பார்கள்? 
சிற்பக்கலையில் செதுக்குதல் மட்டுமல்ல மேலும் பல முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் கடைதல், எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்களே அது போன்றுதான் இந்த முறை.  அதுவும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல கல்லை தொடர்ந்து தேய்த்துக் கொண்டு  இருக்க வேண்டும். சாதாரணமாக  தேய்வதற்கு இவை செங்கல் அல்ல கிரானைட் மற்றும் அதைவிட உறுதியான பாறைகளால் செய்யப்பட்டவை. இதுபோல் ஒன்று இரண்டு அல்ல 20 தூண்களில் யாளியின் வாயில் பந்துகள் உள்ளன ஒரு கோவில் மட்டும். எத்தனை ஆண்டுகள் ஆகிருக்கும்.? நினைத்து பார்க்க   முடிகிறதா!
Daily Facts in Tamil Install: Tamil Reveal Facts App - Google Play
இவையெல்லாம் நம் முன்னோர்கள் சர்வ சாதாரணமாக செய்து வைத்துள்ளனர். இதிலிருக்கும் நுட்பங்களை கற்றாலே போதும் இன்னும் பல சாதனைகளை கட்டிடகலையில் நிரூபிக்கலாம். 
உத்திர கோச மங்கை , கைலாசநாதர் கோவில்,  திருக்குறுங்குடி இன்னும் பல  தமிழக கோவில்களில்  இது போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. 
மேலும் இது போன்ற சுவாரஷ்யமான தகவல்களை உடனடியாக  மொபைலில் பெற எங்கள் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 
Install : Tamil Reveal Facts App - Google Play




