மூளையை குழப்பும் ரப்பர் கை சோதனை பற்றி தெரியுமா?


இத்தாலியில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மேஜையில் தன்னுடைய கை மாற்று ஒரு போலி ரப்பரினால் செய்யப்பட்ட கையின் மாதிரியை வைக்கின்றனர். சிறிது நேரம் இரண்டு கைகளின் விரல்களையும் ஒரே மாதிரியாக தூரிகை கொண்டு தடவி கொடுக்கின்றனர். பின்னர் ஒரு இரும்பு பொருளினை கொண்டு ரப்பர் கையில் அடிக்கின்ற பொழுது வலிதாங்க முடியாமல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் துடிக்கின்றார் சிறிது நேரம்.

இது பல நூறு பேருக்கு தொடர்ந்து செய்ய பட்ட ஓர் சோதனை. இதன் முடிவினை கண்டு விஞ்ஞானிகளே புரிந்துகொள்ள முடியாமல் விழித்து கொண்டிருந்தனர். பின்னர் ஓர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் இதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பார்த்தல், நுகர்தல், தொடுதல் என மின் துடிப்புகளாக மூளைக்கு தெரிவிக்கப்படுகின்றன.

 இந்த ரப்பர் கை சோதனையின் மூலம் பார்வை மற்றும் தொடு திறனை ஏமாற்றி கண்களுக்கு தெரியும் ரப்பர் கையை உண்மையாக்க செய்கின்றனர். 10 நிமிடங்கள் இவ்வாறு செய்யும் பொழுது மூளை முற்றிலும் ஏமாற்றப்பட்டு ரப்பர் கையை உண்மையான கை என எடுத்து கொள்கிறது. பின்னர் ரப்பர் கையில் இரும்பு பொருள் கொண்டு அடிக்கும் பொழுது திசுகளுக்கு மாறாக மூளை மின்துடிப்புகளை உண்டாக்கி வலி உணர்வை உண்டாக்குகின்றன.



No comments

Powered by Blogger.