பெண்கள் நெற்றி பொட்டில் குங்குமம் வைப்பது எதற்காக தெரியுமா?
மேலும் இதை பற்றிய புராணகதைகளும் (Legends) உண்டு. முற்காலத்தில் தீய சக்திகளை கொண்டு ஆருடம் சொல்லும் மாந்திரீகர்கள் தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற யாசகம் கேட்பவர்கள்  வேடத்தில் ஊர் ஊராய் செல்வதுண்டு. பெரும்பாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் சென்று யாசகம் கேட்பதும் வெளியே வருபவர்களை குறிப்பாக கர்ப்பிணி பெண்களை ஹிப்னாடிசம் எனும் வசியவர்மம் மூலம் தன்னுடன் அழைத்து சென்று நரபலி கொடுத்து விடுவார்கள். அவர்களின் உடலை கொண்டு வசிய மை போன்ற மாந்திரீக பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தார்களாம்.இதை தடுக்கவே அப்போது இருந்த முனிவர்களும், சித்தர்களும் திலகத்தை நெற்றி வகிட்டில் வைப்பதன் மூலம் ஒருவர் நம்மை வசியப்படுத்தவும், அவர்களது தீய எண்ணங்களை நம்முள் செலுத்தாமல் இருக்கவும், தடுக்க முடியும் என்று கூறியதால் அன்றிலிருந்து இன்றுவரை வைக்க தொடங்கியுள்ளனர்.  எது எப்படியோ அறிவியல் ரீதியாக இவை மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக தன உள்ளது.

No comments